‘உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், சாதிக்கலாம்’

புதுப் பிறவியாக உருவெடுத்திருக்கும் லட்சுமிராய் நம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம் என்கிறார்.

தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடல்வாகிற்கு மாறிய பின் நீச்சல் உடை அணிந்து எடுத்த படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் அவர்.

அத்துடன் “இந்த உடல்வாகைப் பெறவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்துள்ளேன். அதன் பலன்தான் எனது இந்த புதிய தோற்றம்.

“என்னுடைய பழைய தோற்றத்தை என்னாலேயே நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

“எனது வாழ்நாளில் எடை குறைப்பு, எடை ஏற்றம் என போராடிக்கொண்டிருந்தேன். 

“கடைசியாக ஒரு புதுமனுஷியாக என்னை உணர்கிறேன். உடல் அளவில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே எனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நான் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன். 

“ரசிகர்களே நீங்கள் சாதிக்க விரும்புகிறீர்களா? உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எதையும் சாதிக்க முடியும்,”  என குறிப்பிட்டிருக்கிறார் லட்சுமிராய்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்