மலையாளத்தில் வளர்ந்துவரும் இளம் நடிகையான ஐஸ்வர்யா லட்சுமிக்கு தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த 2016ஆம் ஆண்டே அறிவித்திருந்தார் தனுஷ், ஆனால் அதன் படப்பிடிப்புக்கு முன்பு நிறைய முன்தயாரிப்பு வேலைகளைச் செய்ய வேண்டி இருந்தது. இதனால் சற்றே தாமதமானதாம்.
இந்நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பைத் துவங்க உள்ளனர். இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா லட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது ரௌடிக் கும்பல் குறித்த கதையாம். முக்கியமான காட்சிகளை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர்.
தற்போது சுந்தர் சி. கார்த்திக் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும், தலைப்பு வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

