என்ன தான் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் கூறினாலும், கீர்த்தி சுரேஷின் கவனம் முழுவதும் போலிவுட்டில் தான் பதிந்திருக்கிறதாம்.
முதல் இந்தி படம் வெளியாகும் முன்பே ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உள்ளிட்ட பலருடன் நெருங்கிவிட்டாராம்.
இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் இவர் நாயகியாக நடிக்க உள்ள இந்திப் படத்தில் இருந்து இரு முன்னணிக் கலைஞர்கள் விலகிவிட்டதாக தகவல். இதனால் மனம் நொந்துப் போன மகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார் கீர்த்தியின் தாய் மேனகா.
"திரையுலகில் என்னால் சாதிக்க முடியவில்லை. ஆனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாய். இந்தியிலும் உனக்கான நேரம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்," என்பது தான் மகளுக்கு மேனகா கூறிய அறிவுரையாம்.

