குழந்தை தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி; குரல்கொடுக்கும் லதா

குழந்தை தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி; குரல்கொடுக்கும் லதா

1 mins read
3adad222-eba2-430e-aeab-bd37a1db1ae1
-

குழந்தை ஒருவரை அடித்துத் துன்புறுத்திய பெண்ணின் அடையாளம் பற்றிய தகவல் அறிந்தவர்களை உதவ முன்வருமாறு நடிகை லதா ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார். அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியுடன் லதா, தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா, 'பீஸ் ஆப் சில்ட்ரன்' என்ற குழந்தைகளுக்கான அறநிறுவன அமைப்பை நடத்தி வருகின்றார். சிறார் உரிமைகளைச் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் அவர் அவ்வப்போது தமது கருத்துகளைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையைக் கண்டுபிடிக்க உதவ லதா தமது டுவிட்டர் பதிவில் கேட்டிருக்கிறார். அந்தப் பெண் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தப்படவேண்டும் என்றும் லதா கூறினார்.