திரையரங்குகளில் 'லயன் கிங்'கின் வெற்றி கர்ஜனை

1 mins read
c9b34f9b-5fc0-41d5-a4d3-09cd39f1707d
-

டிஸ்னியின் 'லயன் கிங்' திரைப்படம், தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் இந்தப் படம் இதுவரை 185 மில்லியன் டாலரை ( 252 மில்லியன் வெள்ளி) வசூலித்துள்ளது.

அனைத்துலக அளவில் இந்தத் திரைப்படம் இதுவரை 269.4 மில்லியன் வெள்ளி வசூலித்துள்ளது. 1994ஆம் ஆண்டில் வெளிவந்த 'லயன் கிங்' உயிரோவியத் திரைப்படத்தின் தத்ரூப மறுபதிப்பான இந்த திரைப்படத்தை விரும்புவதாகப் பலர் தெரிவித்தாலும் வேறு சிலர் அந்தப் படத்தை அவ்வளவாக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இவ்வாண்டின் திரை டிக்கெட்டுகளின் விற்பனையில் 35 விழுக்காடு டிஸ்னியின் படங்களுக்கு உரியது என்று 'பாக்ஸ் ஆஃபிஸ் மோஜோ' கேளிக்கை இணையத்தளம் தெரிவித்தது.

இவ்வாண்டில் வெளியிடப்பட்ட 'கேப்டன் மார்வல்', 'அலாடின்',' டாய் ஸ்டோரி 4', 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' ஆகிய மிகப்பெரிய வெற்றிப் படங்களை டிஸ்னி தயாரித்திருக்கிறது.