எதிர்ப்புகளைக் கடந்து வெளியீடு காண்கிறது 'நுங்கம்பாக்கம்'

எதிர்ப்புகளைக் கடந்து வெளியீடு காண்கிறது 'நுங்கம்பாக்கம்'

1 mins read
7d0c2c19-5035-47db-9831-b4680dbba2e9
'நுங்கம்பாக்கம்' படத்தில் நடித்துள்ள புது முகங்கள் மனோ, ஐரா. படம்: ஊடகம் -

டி.ரமேஷ் செல்வன் தற்போது இயக்கியுள்ள படம் 'நுங்கம்பாக்கம்' . புது முகங்கள் மனோ, ஐரா நடித்துள்ளனர். சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் வைத்து தன்னை ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்பவரால் வெட்டிக் கொல்லப்பட்டார் கல்லூரி மாணவி சுவாதி.

இந்தக் கொலைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'நுங்கம்பாக்கம்' படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு கிளம்பியது. பட வெளியீடு தாமதப்பட்டு வந்த நிலையில், அதிக எதிர்ப்பு தெரிவித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்தார். இதையடுத்து படத்தை வெளியிடுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.