நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்று அவருக்குத் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசுகள் மூலம் புகை எழுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவரே இப்படிச் செய்யலாமா? என சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
காரணம், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பிரியங்கா வெளியிட்ட காணொளித் தொகுப்புதான்.
அதில், தீபாவளிக்காக பட்டாசுகளை வெடிக்காமல் இனிப்புகளையும், அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
"பட்டாசுகளின் புகையால் ஆஸ்துமா நோயாளிகள் துன்புறுகிறார்கள். நானே ஓர் ஆஸ்துமா நோயாளி தான். அதையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளேன்," என அப்பதிவில் கூறியிருந்தார் பிரியங்கா.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி மியாமியில் ஒரு சொகுசுக் கப்பலில் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடி உள்ளார். அப்போது, கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா ஆகியோருடன் அமர்ந்து புகை பிடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையடுத்தே அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

