இசையே ஷ்ருதியின் முதல் தேர்வு

இசையே ஷ்ருதியின் முதல் தேர்வு

1 mins read
48e0b0ba-7de6-4a20-9292-c1f7f2f7fb84
-

இசைதான் தமது முதல் தேர்வு என்கிறார் ஷ்ருதி ஹாசன். சிறு வயது முதலே இசையில்தான் அதிக நாட்டமாம்.

எனினும் அதன் பின்னர் சினிமா தம்மை தத்தெடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார்.

"சிறு வயதில் பள்ளியில் இருந்து வந்ததும் தந்தையுடன் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு போய்விடுவேன். ஜெனரேட்டர் வாகனம் அருகில் அமர்ந்து வீட்டுப் பாடம் எழுதுவேன்.

"தயாரிப்பு நிர்வாகிகள் என்னை அன்பாகக் கவனித்துக் கொள்வார்கள். அதனால்தான் எனக்கு சினிமா மீது பற்று வந்ததா? என்று தெரியவில்லை. சினிமா துறைதான் என்னை அழைத்தது. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். எனது வாழ்க்கையை சினிமாவில் இருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது," என்று சொல்லும் ஷ்ருதி, தற்போது லாபம் என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார்.

இது எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் படம். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இது தவிர இந்தி படம் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஷ்ருதி.

"நடிக்க வேண்டும் என்பது சிறு வயது கனவா அல்லது உங்கள் பெற்றோர் சினிமாவில் இருந்ததால் இத்துறைக்கு வந்தீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா? என்ற பழமொழிதான் இதற்கு பதில்," என்று சிரித்தபடி சொல்கிறார் ஷ்ருதி.