'மயூரன்' என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நந்தன் சுப்பராயன்.
இயக்குநர் பாலாவின் 'நந்தா', 'பிதாமகன்' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
"மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாதவை. நம் வாழ்வின் அங்கமாகவே அவை உள்ளன.
"நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நிர்ப்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிட போராளிகளே அதிகம்.
"நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவர்க்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவதுதான். அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை.இதை அடிப்படையாக வைத்தே இப்படத்தை இயக்கி உள்ளேன்," என்கிறார் நந்தன் சுப்பராயன்.

