'சர்பத்'துக்குப் பிறகே அடுத்த படம்

'சர்பத்'துக்குப் பிறகே அடுத்த படம்

1 mins read
796aade0-c496-433d-a59e-f846f10e9c20
'சர்பத்' படம் மூலம் தமிழுக்கு வந்துள்ள இளம் நாயகி ரகசியா கொராக். படம்: ஊடகம் -

'சர்பத்' படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் இளம் நாயகி ரகசியா கொராக். இந்தப் படம் வெளியான பின்னர்தான் தமிழில் அடுத்த வாய்ப்புகளை ஏற்பாராம். இடைப்பட்ட காலத்தில் தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

6 வயது முதலே நடனம், வெளிநாட்டில் கல்லூரிப் படிப்பு என்று இருந்தவர், படிப்பு முடிந்த கையோடு விளம்பரத் துறைக்கு வந்துவிட்டார். சில விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே திரைப்படங்களுக்காக நடிப்புப் பயிற்சி பெற்றாராம்.

"கிராமமும் நகரமும் சார்ந்த பின்னணியில் அமைந்த கதை என்பதால் 'சர்பத்' படத்தில் நடித்தேன். நாயகனாக நடித்துள்ள கதிர் மிகவும் அமைதியானவர். நல்ல திறமைசாலியும் கூட. தற்போது 'ராஜாவாரு ராணிகாரு' தெலுங்கு படத்தில் முக்கிய மான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்," என்கிறார் ரகசியா.