வித்யா பாலன்: அஜித் மிகவும் வெட்கப்பட்டார்

அஜித்தைப் பாராட்டுவது என்றால் நடிகைகள் கொஞ்சம் கூடத் தயங்குவதில்லை. ரசிகர்கள் எதிர்பார்ப்பதைவிட இரு மடங்கு அதிகமாகவே பாராட்டுகிறார்கள். அந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் வித்யா பாலன்.

போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ மூலம் கோடம்பாக்கத்துக்குள் நுழைந்துள்ளார் வித்யா பாலன். போனி கபூர் தயாரிப்பில் அஜித் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.

முன்பெல்லாம் ஒரு படத்தை மறுபதிப்பு செய்வது கூடாது என்று கூறிவந்த வித்யா, ‘பிங்க்’ இந்திப் படத்தின் மறுபதிப்பான ‘நேர்கொண்ட பார்வை’யில் நடிப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

“மறுபதிப்பு என்பது அறவே கூடாது என்று நான் கூறவில்லை. ‘பிங்க்’ போன்ற படங்கள் குறித்து அனைத்துத் தரப்பு, அனைத்து மொழி ரசிகர்களிடமும் ஒருவித எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அப்படிப்பட்ட படங்களை மறுபதிப்பு செய்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.

போனி கபூர் ‘நேர்கொண்ட பார்வை’ குறித்து கூறிய போது எதற்காக மறுபதிப்பு செய்ய வேண்டும் என்றுதான் கேட்டேன்.

ஆனால் இப்போது அவர் நியாயமான முடிவை எடுத்திருப்பதாகவே கருதுகிறேன்,” என்கிறார் வித்யா.

‘நேர்கொண்ட பார்வை’யில் திரைக்கதை, காட்சி அமைப்பை இயக்குநர் வினோத் விவரித்தபோது மிகவும் நிறைவாக உணர்ந்தாராம். அதன் பின்னர் அஜித்தான் கதாநாயகன் என்பது உறுதியானதும் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகி விட்டது என்கிறார்.

“அஜித் போன்ற பெரிய நடிகர் இந்தப் படத்தில் இணைவதாக அறிந்தவுடனேயே படத்தின் வெற்றியை உணரத் தொடங்கி விட்டேன். நல்ல கருத்துகளை சமுதாயத்துக்குச் சொல்லும் இதுபோன்ற படங்களில் பெரிய நடிகர்கள் இருப்பது நல்லது. அப்போதுதான் அந்தக் கருத்து விரைவாகவும் பரவலாகவும் அழுத்தமாகவும் பரவும்.

“நாம் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு காரணங்களுக்காக நடிக்கிறோம். ‘நேர்கொண்ட பார்வை’யைப் பொறுத்தவரை எனக்கான கதாபாத்திரம் மிகப் பிரம்மாண்டமானது என்று சொல்வதற்கில்லை. எனினும் சற்றே முக்கியத்துவம் உள்ள பாத்திரம் என்பேன்,” என்கிறார் வித்யா. கடந்த மாதம் இப்டத்தின் முன்னோட்டம் வெளியானது.

இதுவரை 12 மில்லியன் பேர் அதைப் பார்த்துள்ளனர். ஆனால், முன்னோட்டம் வெளியாகும்வரை வித்யாபாலன் இப்படத்தில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இப்போது அஜித் மனைவியாக அவர் நடிப்பதை அறிந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சரி, அஜித் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அவரது ஆளுமை தன்னைச் சாய்த்து விட்டதாகச் சொல்கிறார் வித்யா.

“லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன் பின்னால் திரட்டி உள்ளார் அஜித். அப்படிப்பட்ட ஒரு பெரிய நட்சத்திரம் என் முன்னால் நிற்பதைத் தொடக்கத்தில் உணர முடியவில்லை.

“அஜித் போன்றே உருவ ஒற்றுமை உள்ள ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. “காரணம், அந்தளவு எளிமையானவராக இருக்கிறார் அஜித். அவருக்கு ‘தல’ என்ற பட்டப்பெயர் இருப்பதைப் பற்றிக் கேட்டபோது, உண்மையில் மிகவும் கூச்சப்பட்டார். இப்படிப்பட்டவர்களைக் காண்பது அரிது.

“தமிழில் எனது நடிப்பில் முதல் படம் வெளியாகிறது.

“இதேபோன்ற கதாபாத்திரங்கள் அமைந்தால் நிச்சயமாக சென்னையில் என்னை தொடர்ந்து பார்க்க முடியும். நல்ல வேடங்களுக்காக அவசரப்படாமல் பொறுமையாகக் கத்திருப்பேன்,” என்கிறார் வித்யா பாலன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!