'சிங்கப்பெண்ணே' பாடல் முன்பே இணையத்தில் வெளியானது வருத்தமளித்தாலும் அதிகாரபூர்வமாக வெளியீடு வந்தபின் அப்பாடல் புரிந்துள்ள சாதனை 'பிகில்' படக் குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் 'பிகில்' படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் இப்பாடல் அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியீடு கண்டது. இதையடுத்து 17 மணி நேரத்திற்குள் 5 லட்சம் 'லைக்'குகளை இப்பாடல் பெற்றுள்ளது.

