'தொரட்டி' பட நாயகி சத்தியகலா கடத்தப்பட்டார் என்று வெளியான தகவல் தமிழ்த் திரையுலகத்தினரை அதிர வைத்துள்ளது.
அவரை மீட்கக் கோரி அப்படக்குழுவினர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் இரண்டாம் தேதி 'தொரட்டி' வெளியாகிறது. இந்நிலையில் சத்தியகலாவை அவரது பெற்றோர் சிறைப்பிடித்து வைத்துள்ளதாக தகவல் பரவியது.
தனது தந்தைக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் தாம் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், தனது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்யவதாகவும் சத்தியகலா பலரிடம் புலம்பியதாக ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தியகலாவை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

