பயணங்களை நேசிக்கும் நாயகிகள்

பயணங்களை நேசிக்கும் நாயகிகள்

1 mins read
bfbd448c-1893-4ab7-b027-83eb0913fa51
அமைரா தஸ்தூர். -

பொதுவாக பயணம் என்றாலே பலருக்கு உற்சாகமாகிவிடும். நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் அண்மையில் நெதர்லாந்து சென்று திரும்பியுள்ளார் இளம் நாயகி அமைரா தஸ்தூர்.

அங்கே ஆம்ஸ்டர்டாமில் படகு சவாரி செய்து மகிழ்ந்தாராம்.

"நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தை அசாதாரணமாக மாற்றும் சக்தி பயணங்களுக்கு உண்டு. எனவே என்னைப் பொறுத்தவரை பயணங்கள் இனிது, நல்லது," என சிலிர்த்துக் கரைகிறார் அமைரா.

கன்னடம், தெலுங்கில் வெற்றிப் படங்களில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, தமிழில் 'வாட்ச்மேன்' படத்தில் அறிமுகமானது தெரியும். அண்மையில் ஐரோப்பா பறந்துள்ளார்.

"நான் எப்பவும் படபடப்பாக இருப்பேன். ஆனால் பயணங்கள் என்னை ஆசுவாசப்படுத்துகின்றன. இப்போது மென்மையானவளாக மாறியுள்ளேன். இந்த மாற்றம் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது," என்கிறார் சம்யுக்தா.