வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் சூரி

1 mins read
6582011b-4147-46bf-8f28-1810428fce75
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் கதாநாயகன் நம்ம சூரி தானாம். -

நகைச்சுவை நடிகர் என்று கூறிக்கொண்டு கோடம்பாக்கத்துக்குள் நுழையும் பலருக்கும் கதாநாயனாக வேண்டும் என்ற ஆசைதான் மேலோங்கி நிற்கிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் வரிசையில் தற்போது பரோட்டா சூரியும் இணைந்துள்ளார்.

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் கதாநாயகன் நம்ம சூரி தானாம். இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

'சீமராஜா' படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக 'சிக்ஸ் பேக்' வைத்தார் சூரி. அப்போது எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

அப்போதே பல முன்னணி இயக்குநர்கள் சூரியை நாயகனாக்க அணுகினார்களாம். ஆனால் அவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை.

ஆனால், வெற்றிமாறன் அணுகியவுடனே நாயகனாக நடிக்க சம்மதித்துள்ளார்.