தனுஷுக்கு தயாரிப்பாளர் அளித்த புதுப்பட்டம்

தனுஷுக்கு தயாரிப்பாளர் அளித்த புதுப்பட்டம்

1 mins read
6283ee7b-a3d2-4811-a430-cd93eb82ed0f
'அசுரன்' படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ். -

நடிகர் தனுஷின் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாட்டமான மனநிலையில் இருப்பார்கள். ஏனெனில் அவர்களது நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறி உள்ளது.

இனி 'இளைய சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படுவார் தனுஷ். இந்தப் பட்டத்தைத் தயாரிப்பாளர் தாணு அவருக்கு அளித்துள்ளார். நேற்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடினார் தனுஷ். இதையொட்டி அவரது ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாம் சென்னையில் நடைபெற்றது.

இதில் தனுஷின் பெற்றோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் தாணு, சத்யஜோதி தியாகராஜன் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தாணு, தனது திறமையை தனுஷ் நாள்தோறும் வளர்த்துக் கொண்டிருப்பதாகப் பாராட்டினார். எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடிய திறமை தனஷுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்தாலும் தனுஷ் சிறப்பாக நடித்துக்கொண்டே இருப்பார். அவரது வாழ்க்கையில் மேலும் பல சிறப்புகளும் செல்வங்களும் வந்து சேரும். அவர் என்றுமே செல்வாக்குடன் திகழ்வார்.

"தனுஷின் பிறந்தநாளன்று ஏராளமான ரசிகர்கள் ரத்த தானம் செய்கிறீர்கள். அந்த வகையில் வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு சிறப்பு வாய்த்ததில்லை. இன்று முதல் அவர் கோடம்பக்கத்தில் 'இளைய சூப்பர் ஸ்டாராக' பவனி வரப் போகிறார்," என்றார் தயாரிப்பாளர் தாணு.

இதற்கிடையே தனது இயக்கத் தில் அடுத்த படத்தை உருவாக்கு வதற்கான வேலைகளையும் துவங்கி உள்ளார் தனுஷ். இந்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு படத்தை இயக்கக்கூடும்.