மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார் நிக்கி கல்ராணி.
தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டாலும் கோடம்பாக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல் பிற மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளாராம்.
அந்த வகையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஒரு அடார் லவ்' படத்தை இயக்கிய ஓமர் லூ இயக்கத்தில் நடிக்க உள்ளார் நிக்கி. இதில் அருண்குமார் நாயகனாக நடிக்கிறார்.
"மலையாளத்தில் எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பது தெரியும். தற்போது நான் நடிக்கும் கதைக்களமும் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றியது. அதனால் தயக்கமின்றி நடிக்கிறேன். தமிழிலும் என்னைப் பார்க்கமுடியும்," என்கிறார் நிக்கி.

