கிரிக்கெட் ஆடி மகிழும் ராஷி கன்னா

கிரிக்கெட் ஆடி மகிழும் ராஷி கன்னா

1 mins read
3ef2f91a-caca-4ab2-83e5-6b03906bb7d7
படப்பிடிப்பின்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அங்குள்ளவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது ராசி கண்ணாவுக்குப் பிடிக்குமாம். படம்: ஊடகம் -

படப்பிடிப்பின் போது நடிகர்கள் சிலர் கிரிக்கெட், பேட்மிண்டன் என ஏதாவது விளையாடுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.

அண்மைக் காலமாக நடிகைகளுக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டது. இளம் நாயகி ராஷி கன்னாவுக்கு கிரிக்கெட்டில் ஈடுபாடு அதிகமாம். அதனால் படப்பிடிப்பின்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார்.

"கிரிக்கெட் எந்தளவு பரபரப்பான விளையாட்டோ அதே அளவிற்கு வேடிக்கையும் சுவாரசியமும் நிறைந்தது. அதனால் அனுபவித்து விளையாட முடியும். என்னைவிட படக்குழுவில் உள்ள எல்லோருமே நன்றாக விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டுத் தருணங்களை மறக்கவே இயலாது," என்கிறார் ராஷி கன்னா.