விஜய்யைப் பற்றிய பொய்ச்செய்தியால் ஏற்பட்ட சலசலப்பு

விஜய்யைப் பற்றிய பொய்ச்செய்தியால் ஏற்பட்ட சலசலப்பு

1 mins read
ec6f5a61-9ab1-413f-affb-fdb32f616c72
-

நடிகர் விஜய் இறந்துவிட்டதாகப் பொய்ச்செய்தி, டுவிட்டரில் #RIPactorVIJAY என்ற 'ஹேஷ்டேக்' வழியாகப் பரவியது. இதனைப் பார்த்த கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் இளையர்கள் மீதான தம் அதிருப்தியைத் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தினார்.

இயற்கை சீற்றங்கள், பஞ்சம், கொடூரக் குற்றச்செயல்கள் உள்ளிட்ட பலவற்றால் உலகம் பாதிக்கப்படும் நேரத்தில் தமிழ்நாட்டு இளையர்கள் இப்படியொரு போக்கைச் சமூக ஊடகத்தில் ஆரம்பித்து வைத்தார்களே என்று அஷ்வின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் அஜித் ரசிகர்கள் என சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்தப் போலி செய்தியைப் பரப்புவதில் விஜய் ரசிகர்களுக்கும் பங்குண்டு எனக் கூறப்படுகிறது. இதன் தொடர்பான ஏராளமான 'மீம்ஸ்' படங்கள் டுவிட்டரில் வெளியாகி வருகின்றன.