நான் பெண்ணியவாதி இல்லை: அமலா பால்

அமலா பால் துணிச்சலாக ஆடையின்றி நடித்திருக்கும் ‘ஆடை’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாட மற்றொரு பக்கம் பிரபலங்களின் வாழ்த்தும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிரபலங்களுக்கு என்று ஒரு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ‘ஆடை’ படத்தில் நடித்தது குறித்தும் காமினி கதாபாத்திரத்தைக் குறித்தும் நடிகை அமலா பால் கூறும்போது, “காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அவளுடைய நேர்மைதான். ‘ஆடை’ ஓர் உண்மையான படம். ‘ஆடை’ என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த ‘ஆடை’ பல உண்மைகளை காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம்.

“இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த விஷயம் என்னவென்றால், ‘பிராங்க்’ நிகழ்ச்சியைப் பற்றி கூறியிருந்த கருத்துதான். இந்தப் படத்தில் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்வதுதான் ‘பிராங்க்’. தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை.

“இந்த அனுபவம் எல்லாருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆகையால்தான் இந்த கருத்துடன் அவர்களால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதைத்தான் படத்தில் காண்பித்திருக்கிறோம்.

“சுதந்திரம் என்றால் என்னவென்று அவரவர்க்கு ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், உண்மையான சுதந்திரம் என்ன என்பதை படத்தில் கூறியிருக்கிறோம். மேலும், இப்படத்தைப் பற்றிய செய்திகளில் தவறான தலைப்புகளைப் பதிவிட்டு வரும் தந்திரம் நடந்து கொண்டிருக்கிறது. இது நெறிமுறையற்ற விஷயம்.

“நாங்கள் அந்த மாதிரி படம் எடுக்கவில்லை. இப்படத்திற்கான முதல் பார்வையையும் முன்னோட்டக் காட்சியையும் பார்க்கும்போதே இதைவிட சிறந்ததைக் கொடுக்க முடியாது என்று புரிந்திருக்கும். ஆனால், இப்படத்தை பொருத்தவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அப்போது ஏற்பட்ட சர்ச்சை படம் வெளியானதும் ஏற்பட்டிருக்கும். படம் இப்படித்தான் எடுத்திருக்கிறோம் என்று நாங்கள் முன்பே நேர்மையாகக் கூறிவிட்டோம். நாங்கள் யாரையும் ஏமாற்றியோ, தவறாக வழிகாட்டியோ இப்படத்தைப் பாருங்கள் என்று கூறவில்லை.

“மேலும், இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. காமினி என்ற பெண் சுதந்திரமான, தைரியமிக்க, துணிச்சலான பெண். அவள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவாள், இதெல்லாம் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது. காமினியின் அம்மா பெண்ணியம் பற்றி கேட்கும்போதுகூட இதுதான் பெண்ணியம் என்று காமினி கூறவில்லை. இன்னும் கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகின்றது.

“நானும் இந்தப் படத்தில் நடிக்கும்போது இது பெண்ணியம் சார்ந்த படம் என்று நினைக்கவில்லை. காமினி என்கிற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்கிறது என்பதைக் காட்டுவதுதான் இப்படம். அதைத்தவிர பெண்ணியத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

“நான் பெண்ணியவாதி என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன்,” என்று கூறினார் அமலா பால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!