'பிகில்' போட்டியாக களமிறங்கும் 'பட்டாஸ்'

'பிகில்' போட்டியாக களமிறங்கும் 'பட்டாஸ்'

1 mins read
89e96a3d-c985-45ee-bdc6-8d1240ab661e
தனு‌ஷ் -

தமிழ்ச் சினிமாவின் வெளியீடுகளுக்கு முக்கியமான நாள் தீபாவளி நாள். அந்தத் தினத்தில் படங்கள் வெளிவருவது திரையுலகில் உள்ள பலருக்கும் பிடிக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடிக்கும் 'பிகில்' படம் வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 1,000 திரை அரங்குகளிலும் அந்தப் படத்தை வெளியிட வாய்ப்பில்லை. எனவே, வேறு சில படங்களும் வெளியாகும். இருந்தாலும் 'பிகில்' படத்திற்குப் போட்டியாக படத்தை வெளியிட பலரும் தயங்குவார்கள். இந்நிலையில் தனுஷ், மெஹ்ரின் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளார்கள் என செய்தி வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலுக்கு ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திற்குப் போட்டியாக சத்யஜோதி நிறுவனம் தயாரித்த 'விஸ்வாசம்' படம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. அந்நிறுவனம்தான் 'பட்டாஸ்' படத்தையும் தயாரிக்கிறது. ரஜினிக்குப் போட்டியாக படத்தை வெளியிட்டு வெற்றியையும் வசூலையும் பெற்றவர்கள், விஜய்க்கு போட்டியாக படத்தை வெளியிட எந்தத் தயக்கமும் காட்ட மாட்டார்கள் என்றே தெரிகிறது.