'கழுகு 2' பற்றி பிந்து மாதவி

'கழுகு 2' பற்றி பிந்து மாதவி

2 mins read
2badfa69-d6c4-4acd-9a48-fae3601ac19f
பிந்து மாதவி -

பிந்து மாதவியின் நடிப்பில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'கழுகு 2'.

இந்தப் படத்தைப் பற்றியும் இதில் அவர் பெற்ற அனுபவத்தைப் பற்றியும் பிந்து மாதவி கூறுகையில், "2012ல் வெளியான 'கழுகு' படத்தில் மிகவும் வெகுளியான திரையுலகத்திற்குப் புதிதாக வந்திருந்த பிந்து மாதவியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் 'கழுகு 2'ல் திரையுலகத்தைப் பற்றி நன்கு அறிந்த பிந்து மாதவியைப் பார்ப்பீர்கள்.

"படப்பிடிப்பு மூணாறில் நடைபெற்றது. வனப்பகுதியில்தான் அதிகமான காட்சிகள் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பு நேரத்தில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. பல இடங்களுக்கு ஜீப்பிலும் சில இடங்களுக்கு நடந்தும் செல்ல வேண்டியிருந்தது. நடக்கும் பாதை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு பல இடங்களுக்குச் சென்றோம்.

"கேரவன்' அந்த மலைப் பகுதிக்குள் வரமுடியாத நிலையால் படப்பிடிப்பு தளத்திலிலேயே உடைகளை மாற்றிக்கொண்டு படப்பிடிப்புக்குத் தயாராகவேண்டிய நிலை ஏற்பட்டது.

"அதனால் படப்பிடிப்புக் குழுவில் இருந்த பெண்கள் அனைவரும் என்னைச் சுற்றி அரண்போல நின்றுகொள்வார்கள். பின்னர் நான் உடைமாற்றிக்கொண்டு நடிப்பேன். இதுபோல் பல அனுபவங்கள் எனக்கு இந்தப் படப்பிடிப்பில் கிடைத்தன.

"என்னுடைய உடைகூட வனப்பகுதியில் இருக்கும் பெண்கள் அணியும் உடைகள்தான். நான் இயக்குநரிடம் வேறு உடை மாற்றிக்கொள்ளலாமா என்று கேட்டதற்கு, காட்டுப் பகுதியில் இருக்கும் பெண்கள் அணியும் உடைதான் உடுத்தவேண்டும் என்று கூறிவிட்டார். அதனால் படம் முழுவதும் 4 அல்லது 5 உடைகள் மட்டும்தான் இருக்கும்.

2012க்குப் பிறகு நானும் கிருஷ்ணாவும் சந்தித்தோம். முன்பு நான் பழகிய அதே கிருஷ்ணாவாகத்தான் இருந்தார்.

அவர் எப்போதும் அங்கு இருப்பவர்களிடம் கிண்டல் செய்துகொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பார். அது அங்கிருந்த எங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது," என்று கூறினார் பிந்து மாதவி. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.