முப்பரிமாணத்தில் வெளியாகும் 'குருஷேத்திரா'

முப்பரிமாணத்தில் வெளியாகும் 'குருஷேத்திரா'

1 mins read
4fc946cb-ef1c-43d3-a645-297f49755ddd
-

இதுவரை இல்லாத மிரட்டலான வேடத்தில் 'குருஷேத்திரா' படத்தில் திரௌபதியாக சினேகா நடித்திருக்கிறார். இந்தப் படம் முப்பரிமாணத்தில் கன்னடத்தில் ரூ.120 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கௌரவர்கள், பாண்டவர்களிடையே நடைபெறும் போராட்டத்தை விவரிக்கும் படம். நாகன்னா இயக்கும் இந்தப் படத்தில் தர்ஷன், அர்ஜுன், அம்பரீஷ், வி.ரவிச்சந்தர், சோனு சூட், ரவி ஷங்கர், ராக்லைன் வெங்கடேஷ், சினேகா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். முனிரத்னா எழுதி தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் கர்ணனாக நடித்துள்ளார். பீஷ்மராக அம்பரீஷ், கிருஷ்ணராக வி.ரவிச்சந்தர், அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவிஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தமிழில், 'வி கிரியேஷன்ஸ்' சார்பில் தாணு வெளியிடுகிறார். இதுதவிர இந்தி, தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.