'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்தை எடுக்க முடிவு செய்த இயக்குநர் சங்கருக்கும் வடிவேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு, படங்களில் நடிக்க வாய்மொழி உத்தரவாக 'ரெட்கார்டு' போடப்பட்டது. அதனால் வடிவேலு படங்களில் நடிக்க முடியாத நிலை உருவானது. இதைத் தொடர விரும்பாத நல்ல உள்ளம் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர் இருவரிடமும் பேசி சமரசத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
அதன்படி சங்கர் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியைக் கைவிடுவதாகவும் அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இயக்குநர் சங்கர் தயாரிக்கும் இரண்டு படங்களில் காசு வாங்காமல் வடிவேலு நடித்துக்கொடுக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் அதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

