புதிய சர்ச்சையில் சிக்கிய ராதிகா

புதிய சர்ச்சையில் சிக்கிய ராதிகா

1 mins read
c024d4eb-54fc-4e97-98b2-21e13ddda1c8
நடிகை ராதிகா ஆப்தே. படம்: ஊடகம் -

ஹாலிவுட் கலைஞர்கள் நேரத்தை வீணடிப்பதில்லை என்றும் அனைத்து விஷயங்களையும் நெறிமுறைகளைப் பின்பற்றி கச்சிதமாகச் செய்கின்றனர் என்றும் பாராட்டுகிறார் நடிகை ராதிகா ஆப்தே.

மேலும் பேசிய சம்பளத்தை ஒழுங்காகக் கொடுப்பதாகவும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

"ஒரு படத்தை இயக்குவதில் ஒவ்வோர் இயக்குநருக்கும் ஒருவித பாணி உள்ளது. இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இடையே என்ன வித்தியாசம் என்று கேட்கிறார்கள்.

"ஹாலிவுட்டில் கலைஞர்கள் எதிலும் நேரத்தைச் சரியாகப் பின்பற்றுகிறார்கள். மேலும் சரியான நேரத்திற்கு உழைப்புக்கான ஊதியத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். அதனால் சம்பளத்தைக் கொடுக்குமாறு அங்கு யாரிடமும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் எழுவதில்லை," என்று கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.

இவரது இந்தக் கருத்துக்கு பாலிவுட்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.