'பட்டாஸ்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மெஹ்ரின் பிர்சாதா, வாயைத் திறந்தால் ஒரே தனுஷ் புராணமாக இருக்கிறது.
படப்பிடிப்பின்போது தனுஷ் தான் இவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தாராம். தனுஷ்போல் நடிக்க முயற்சி செய்வதாகவும் கூறுகிறார்.
"எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், தனுஷ் ஒரே 'டேக்'கில் நடிப்பார். நானும் அதுபோல் நடிக்க முயல்கிறேன். அவர் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார்.
"கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப கவர்ச்சியாக நடிப்பது குறித்து முடிவெடுப்பேன்," என்று சொல்லும் மெஹ்ரினுக்குத் தமிழில் விஜய், அஜீத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களைப் பிடிக்குமாம்.
அவர்களுடன் இணைந்து நடிக்கவும் விரும்புகிறார். அத்தகைய வாய்ப்பு அமைந்தால் சம்பளம் குறித்தெல்லாம் யோசிக்காமல் ஒப்புக்கொள்வாராம்.

