ஹாலிவுட் பாணியில் விக்ரம் பிரபுவின் 'அசுரகுரு'

ஹாலிவுட் பாணியில் விக்ரம் பிரபுவின் 'அசுரகுரு'

1 mins read
8a09378f-dd27-4b9e-987f-9c93a7d5614a
விக்ரம் பிரபு, மகிமா நம்பியார். படம்: ஊடகம் -

ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் 'அசுரகுரு'. இதில் அவரது ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறிய நிலையில், விரைவில் படம் வெளியீடு காணவிருக்கிறது. விக்ரம் பிரபுவின் அண்மைய படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை. அந்தக் குறையை இப்படம் போக்கும் என உறுதியாக நம்புகிறாராம். "ஹாலிவுட் பாணியில் உருவாகி உள்ள படம் என்பதால் நிச்சயம் 'அசுரகுரு' வெற்றி காணும். விக்ரம் பிரபு, மகிமா சம்பந்தப்பட்ட காட்சிகள் இளையர்களை வெகுவாகக் கவரும்," என்கிறார் இயக்குநர் ராஜ்தீப்.