விவசாயத்தின் மேன்மையை விவரிக்கும் படமாக உருவாகிறது 'ஐ-ஆர்8'

விவசாயத்தின் மேன்மையை விவரிக்கும் படமாக உருவாகிறது 'ஐ-ஆர்8'

1 mins read
5fcd78e3-44e4-4b5a-a11c-7d6b999fd3fc
-

விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் 'ஐ-ஆர்8'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி உள்ளார் என்.பி.இஸ்மாயில். அனீபா, விஷ்வா என படத்தில் இரண்டு கதாநாயகர்கள் உள்ளனர். பிந்து கதாநாயகியாக நடித்துள்ளார். "தற்போதைய காலகட்டத்தில் விவசாயத்துக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்பது என் கருத்து. திரைப்படங்கள் மூலம் சொல்லப்படும் கருத்து பொதுமக்களிடம் விரைவில் சென்றடையும். அதன் காரணமாகவே விவசாயத்தின் மேன்மையை உணர்த்தும் கதையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளோம்," என்கிறார் இயக்குநர் இஸ்மாயில்.