வாரிசுக்கு நாயகியான கீர்த்தி

வாரிசுக்கு நாயகியான கீர்த்தி

1 mins read
071d6842-0240-446f-9027-a087754b5057
மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலின் மகனுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளாராம் கீர்த்தி.  படம்: ஊடகம் -

கீர்த்தி சுரேஷை தமிழில் தான் அதிகம் பார்க்க முடிவதில்லை. ஆனால், மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலின் மகனுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளாராம் கீர்த்தி.

அண்மையில்தான் மோகன்லால் நடித்த 'அரபிக்கடலின்டே சிம்ஹம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கீர்த்தி.

இந்நிலையில், மோகன்லால் மகன் பிரணவ் நடிக்கும் புதுப் படத்திலும் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். வினீத் ஸ்ரீநிவாசன் இப்படத்தை இயக்குகிறார்.

கீர்த்தி சுரேஷ் தமிழில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அவர் கைவசம் தற்போது ஒரு தமிழ்ப் படம்கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இதையடுத்து, அவர் மீண்டும் தமிழில் கவனம் செலுத்த வேண்டும் என அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.