உலக அழகிப் பட்டம் வென்றவரும் பிரபல இந்தி நடிகையுமான சுஷ்மிதா சென், தன்னைவிட 19 வயது குறைந்த இளையரான பிரபல விளம்பர மாடல் அழகர் ரோமன் ஷாலை நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ள சுஷ்மிதா சென், தமிழில் 'ரட்சகன்' படத்தில் நடித்துள்ளார். நடிப்புடன் சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாடு காட்டி வரும் சுஷ்மிதா, இரு பெண் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சுஷ்மிதாவுக்கு 43 வயது. ரோமன் ஷாலுக்கு 24 வயது. ரோமனும் சுஷ்மிதாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சுற்றுலா செல்லும் புகைப்படங்களை இருவரும் தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் அவ்வப்போது பகிர்வது வழக்கம்.
தங்களது உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள இவர்கள், நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இதற்கு சுஷ்மிதாவின் மகள்கள் சம்மதம் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

