'ஆடை' படத்தில் நடிகை அமலா பால் கதைக்கு ஏற்ப அரை நிர்வாண நிலையில் நடித்திருக்கிறார். அதை பலரும் பாராட்டுகின்றனர். சிலர் விமர்சிக்கின்றனர். சிலரது விமர்சனங்களை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை. அது குறித்தெல்லாம் யோசிக்காமல் அமலா பால் நடித்ததால்தான் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட கதையும் காட்சி அமைப்புகளும் எனக்கும் கிடைத்தால் நானும் அரை நிர்வாண நிலையில் ஆடை குறைத்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் பிந்து மாதவி.
தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் 'வண்டிச்சக்கரம்' என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
இந்த சில்க் ஸ்மிதாவின் தோற்றத்திலேயே பிந்து மாதவியும் இருப்பதாகவும் சில்க்கின் கண்களைப் போன்றே அச்சுஅசலாக பிந்து மாதவியின் கண்களும் இருப்பதாகவும் ரசிகர்கள் பலரும் கூறியுள்ளனர்.
இந்த ஒப்பீடு தன்னைக் கவர்ந்துள்ள தாகவும் இது தனக்கு கூடுதல் பலம் தருவதாகவும் கூறியுள்ளார் பிந்து மாதவி.
பிந்து மாதவி அறிமுகமானபோது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார் என அனைவரும் நம்பினர்.
ஆனால், அவருக்கு சரியான களம் அமையாததால் அப்படியே பின்தங்கி நின்றுவிட்டார். இப்போது மீண்டும் படங்களில் தலைகாட்டத் துவங்கியுள்ளார்.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எனக்கும் கிடைத்தால் மகிழ்வேன். அப்படிப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவதோடு நடிக்கும் நடிகைக்கும் நல்ல பெயரை ஈட்டித் தருகின்றன.
சில தனிப்பட்ட காரணங்களால், என்னால் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்கமுடியவில்லை.
ஆனாலும் 'கழுகு', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த என்னை ரசிகர்கள் இன்றும் பாராட்டிப் பேசுகின்றனர் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஆடை' படம் வெளியாவதற்காக அமலா பால் சம்பளத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்ததாகக் கூறினார்; அவருக்கு என் வாழ்த்துக்கள். எனக்கும் சில சமயம் அந்த மாதிரி நடந்துள்ளது என்கிறார், பிந்து மாதவி.

