யோகா செய்ய வலியுறுத்தும் ரகுல்

யோகா செய்ய வலியுறுத்தும் ரகுல்

1 mins read
e85911c0-9e62-402a-a045-cb4ac8dd4450
-

தினமும் யோகாசனம், உடற்பயிற்சிக்காக ஒன்றிரண்டு மணி நேரமாவது செலவிடுகிறார் ரகுல் பிரீத்சிங். படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் கூட இதைச் செய்யத் தவறுவதில்லை.

பிரபல யோகா பயிற்சியாளர் அனுஷ்கா கர்வானியிடம் பயிற்சி பெறுகிறாராம். இதன் பலனாக தன் உடலை வில்லாக வளைத்து யோகா பயிற்சி மேற்கொள்ள முடிகிறது என்கிறார்.

"இத்தகைய பயிற்சி மூலம் உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக, உற்சாகமாக வைத்திருக்க முடியும். இது அனுபவ ரீதியில் நான் உணர்ந்த உண்மை. எனது ரசிகர்களும் நலன்விரும்பிகளும் கட்டாயம் யோகா பயிற்சி பெற வேண்டும் என்பதுவே எனது விருப்பம்," என்கிறார் ரகுல் பிரீத்சிங்.