கலைஞர்கள் எந்த வகையிலும் ரசிகர்களின் மனதைக் காயப்படுத்தி விடக்கூடாது என்கிறார் பூர்ணா.
ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது ஒரு வகையில் கலைஞர்களின் கடமை என்றும் குறிப்பிடுகிறார்.
தற்போது கன்னடத்தில் நடித்துவரும் படத்தின் மூலம் தனது நூறாவது படத்தைச் சத்தமின்றி எட்டிப்பிடித்துள்ளாராம்.
"குறுகிய காலத்தில் 100 படங்களில் நடித்துள்ளேன் என்பது ஆச்சரியமளிக்கிறது. இந்தச் சாதனை கைகூட ரசிகர்கள்தான் முக்கிய காரணம். அவர்களின் அன்பு இல்லையென்றால் இந்த உயரத்தைத் தொட்டு இருக்க முடியாது. அதனால்தான் அவர்களுடைய மனம் கோணும்படி நடந்துகொள்ளக்கூடாது என்கிறேன். ரசிகர்கள் ஆசைப்பட்டு செல்ஃபி படம் எடுக்க விரும்புகிறார்கள். அதற்காக சில நிமிடங்கள் ஒதுக்குவதில் என்ன தவறு?" என்று கேட்கிறார் பூர்ணா.

