'கொடி'யில் தனுஷுடன் இணைந்து நடித்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கில் வெற்றி பெற்ற 'நின்னு கோரி'யின் தமிழ் மறுபதிப்பில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
தெலுங்கில் நானியும் நிவேதா தாமசும் நடித்திருந்தனர். இந்நிலை யில் நிவேதாவின் நடிப்புடன் தனது நடிப்பை ஒப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் அனுபமா.
இந்தப் படத்தில் பரதநாட்டிய கலைஞர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம். ஏற்கெனவே முறைப்படி நடனம் கற்றவர் என்பதால் இந்த வேடத்தில் கச்சிதமாக நடிக்க முடியும் என்கிறார்.
"நிவேதா தாமஸ் தெலுங்குப் பதிப்பில் சிறப்பாக நடித்திருந்தார். நான் எப்படி நடித்தாலும் அவரோடுதான் ஒப்பிடுவார்கள். எனது பாணியில்தான் நான் நடிப்பேன். எனவே, யாருடனும் ஒப்பிடவேண்டாம்," என்கிறார் அனுபமா.

