'நாடோடிகள்-2' படத்தை அடுத்து சமுத்திரகனி இயக்கும் அடுத்த படத்தில் விஷால் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திரா சௌந்தரராஜன் எழுதிய சிவம் என்ற நாவலை அண்மையில் படித்துள்ளார் சமுத்திரகனி.
அந்தக் கதையில் விஷால் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினாராம். கதையைக் கேட்ட விஷாலுக்கும் அது பிடித்துப் போகவே கதையின் உரிமையை உடனே வாங்கி உள்ளார். உடனடியாக பட வேலைகளைத் துவங்கிவிட்டார்.
இது அதிரடியும் ஆன்மிகமும் கலந்த படைப்பாக உருவாக இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

