மனைவியைக் கொன்றதாக பாகுபலி நடிகர் மீது குற்றச்சாட்டு

மனைவியைக் கொன்றதாக பாகுபலி நடிகர் மீது குற்றச்சாட்டு

1 mins read
9f57bfc1-677e-4f1c-b21d-aefaac05bf80
-

வரதட்சணைக்காகத் தனது சொந்த மனைவியைக் கொலை செய்ததன் தொடர்பில் பாகுபலி நடிகர் மது பிரகாஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாரதி என்ற அவரது மனைவி நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டதாக ஆந்திரப் பிரதேச போலிசார் தெரிவித்தனர்.

மது பிரகாஷ் வரதட்சணைக்காக பாரதியை அடிக்கடி சித்திரவதை செய்வதாகப் போலிசார் தெரிவித்தனர். அவர் தனது மனைவியை அடித்து உதைத்து அவரது வாழ்க்கையை நரகமாக்கியதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மது பிரகாஷ் நடித்தார். 2015ஆம் ஆண்டில் அவரும் பாரதியும் திருமணம் செய்துகொண்டனர்.

"மது பிரகாஷை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர் தற்போது தடுப்புக்காவலில் இருக்கிறார்," என்று போலிஸ் அதிகாரி ஒருவர் ஊடங்களிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்