'மாநாடு' படத்திலிருந்து சிம்பு வெளியேற்றம்

'மாநாடு' படத்திலிருந்து சிம்பு வெளியேற்றம்

1 mins read
4b591f7c-a42b-4b43-8ffc-ab6fc94c4c91
-

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும் 'மாநாடு' படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்த சிம்பு வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. சிம்பு காலதாமதம் செய்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மற்றொரு கதாநாயகனைத் தேர்ந்தெடுத்த பின்னர் அது பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.

எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் சிம்பு பொறுப்பற்று நடந்துகொண்டதால் மனவருத்தத்துடன் அவரை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சுரேஷ் காமாட்சி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.