தமிழிலும் 'ஓ பேபி' விரைவில் வெளியீடு

தமிழிலும் 'ஓ பேபி' விரைவில் வெளியீடு

1 mins read
3a3261e5-b890-4670-860c-002109d9e52c
-

சமந்தா நடிப்பில் தெலுங்கு மொழியில் அண்மையில் வெளியாகி, வசூலை வாரிக் குவித்த 'ஓ பேபி' திரைப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, தற்போது தமிழிலும் அதை மறுபதிப்பு செய்து இம்மாதம் 15ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

கொரிய திரைப்படமான 'மிஸ் கிரானி'யைத் தழுவி எடுக்கப்பட்ட 'ஓ பேபி' படத்தில் நடிகை லட்சுமி பாட்டியாகவும் சமந்தா பேத்தியாகவும் நடித்துள்ளனர். அந்தப் படத்தைத் தமிழில் வெளியிடுவதை அடுத்து, நடிகை சமந்தாவின் ரசிகர்கள் இப்போதே 'கட் அவுட்' வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

"இதேமாதிரிதான் கன்னடப் படமான 'யு-டர்ன்' தமிழில் வெளியானபோது ரசிகர்கள் 'கட் அவுட்' வைத்தார்கள். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ெபறாமல் போனது. இதுபோல் இப்போது 'ஓ பேபி' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறாமல் போய்விடுமோ என்று கவலையில் உள்ளேன்," என்கிறார் சமந்தா.