திகில் படத்தின் அதிரடி நாயகன் யோகி பாபு

திகில் படத்தின் அதிரடி நாயகன் யோகி பாபு

1 mins read
3822f530-c8b5-4d49-996f-193a97ddb8b4
யோகி பாபு, -

தமிழ்ச் சினிமாவில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு, அடுத்தகட்டமாக அதிரடி நாயகனாகக் களமிறங்க இருக்கிறார்.

முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், ஜோதிகா முதல் நயன்தாரா வரை என நாயகியை மையப்படுத்திய கதைகளிலும் யோகி பாபு நடித்துள்ளார்.

தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் இவர் ஒரு காட்சியிலாவது வந்துவிடுகிறார்.

இந்நிலையில் யோகி பாபுவை மையமாக வைத்து தற்போது 'காதல் மோதல் 50/50' எனும் அதிரடி கலந்த பேய் படம் உருவாகி வருகிறது.

தரண்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அலெக்சாண்டர் கதை எழுதியுள்ளார். 'த்ரயா' என்ற கன்னடத் திரைப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் யோகி பாபுவிற்கென பிரத்தியேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார். லிபிசினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் வி.என்.ஆர் இப்படத்தினைத் தயாரித்து வருகிறார்.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முன்னோட்ட காட்சி விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது ரஜினியின் 'தர்பார்' மற்றும் விஜய்யின் 'பிகில்' படங்களிலும் முக்கிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் யோகி.

ஏற்கனவே 'தர்ம பிரபு', 'கூர்க்கா' ஆகிய படங்களில் யோகி பாபு நாயகனாக நடித்திருந்தார்.

ஆனால், அப்-ப-டங்-கள் எதிர்-பார்த்த வெற்-றி-யைப் பெறவில்லை என்றாலும் மீண்டும் நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார் யோகி.