சுஷ்மா சுவராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் போட்டி

அண்மையில் மறைந்த இந்திய முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகளிடையே போட்டி நிலவுகிறது.

சுஷ்மா சுவராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்களா என ‘மிஷன் மங்கள்’ நாயகிகளிடம் அதன் இயக்குநர் கேள்வி கேட்டார்.

இதற்குப் பதிலளித்த வித்யா பாலன், “சுஷ்மா சுவராஜ் பல பாலிவுட் நடிகைகளால் போற்றப்பட்ட பிரபல அரசியல்வாதிகளில் ஒருவர்.

“நான் பள்ளியில் படிக்கும்போது, ​​சுஷ்மா தொலைக்காட்சியில் பேசுவதை எப்போதும் பார்ப்பேன்.

“அவர் ஒரு சிறந்த தலைவர். நான் சுஷ்மாவின் தீவிர ரசிகை, அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க யார்தான் விரும்பமாட்டார்கள்? அவரைப் போன்று நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

“அவர் வலிமையானவர் மற்றும் சிறந்த பேச்சாளர். நான் சுஷ்மாவை ஒரு முறை விமான நிலையத்தில் சந்தித்தேன். அவருக்குக் கொடுக்கப்படும் செல்வாக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு,” எனக் கூறினார்.

வித்யா பாலனுக்குப் போட்டியாக ‘பிங்க்’ பட நாயகி டாப்சியும் சுஷ்மா கதாபாத்திரத்தில் நடிக்கப் பேரார்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.

அக்‌ஷய் குமார், நித்யா மேனன், வித்யா பாலன், டாப்சி, சோனாக்‌ஷி சின்ஹா, ஷர்மான் ஜோஷி மற்றும் பலர் நடித்த ‘மிஷன் மங்கள்’ படம் வரும் ஆகஸ்ட் 15 வெளியாகவுள்ளது. இப்படத்தை ஜெகன் சக்தி இயக்கியுள்ளார்.

அரசியல் தலைவர்கள், சினிமா நடிகைகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், அரசியல் தலைவர் சுஷ்மா சுவராஜின் வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!