‘நானும் சிங்கிள்தான்’

அறிமுக இயக்குநர் கோபி இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது ‘நானும் சிங்கிள்தான்’. இது காதலும் நகைச்சுவையும் கலந்த கதையாம். தீப்தி திவேஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லண்டனில் உள்ள ‘தமிழ் டான்’ கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர். ரகுமானிடம் பணியாற்றியவர். சென்னை, லண்டன் மற்றும் ஐரோப்பாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரைத்துறை மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பின்மை நிலவுவதாகவும் சொல்கிறார் நடிகை நித்யா மேனன். படம்: ஊடகம்

11 Dec 2019

நித்யா மேனன்: எல்லாத்துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது