‘கவர்ச்சியாக நடிப்பதை குறைத்தேன்; படங்கள் குறைந்தன’

தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்பொழுது அவருக்கு 29 வயது ஆகிறது. பட வாய்ப்புகள் பற்றி அவர் கூறுகையில், “நான் ஆண்டுக்கு 4, 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றவர்கள்போல் அதிகம் படங்கள் உங்களுக்கு இல்லையே? ஏன்? என்று கேட்கிறார்கள். நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நிறைய நடித்துவிட்டேன். இனி அதுபோல் நடிக்க வேண்டாம் என்று தோன்றியது.

“அந்த காரணத்தினால்தான் எனது படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனது வெற்றியின் ரகசியம் உண்மையாக வேலை செய்வதுதான். செய்கிற வேலையை மனப்பூர்வமாக ஒன்றி செய்தாலே வெற்றிகள் தேடி வரும்.

“படப்பிடிப்பில் இருக்கும்போது எனது அம்மா வந்து பேசினாலும் பேசமாட்டேன். கைத் தொலைபேசியை அணைத்து வைத்துவிடுவேன். என்னுடையை குணம் தெரிந்தவர்கள் படப்பிடிப்பு நேரங்களில் எனக்குத் தொல்லை கொடுக்கமாட்டார்கள்.

“உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். எனது அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதனால் மாப்பிள்ளை தேடும் வேட்டையில் அவர் மும்முரமாக இருக்கிறார்,” என்று கூறினார் அழகு தமன்னா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!