ஜாலியான படமாக உருவாகி உள்ள ‘கன்னி ராசி’

‘கன்னி ராசி’ திரைப்படம் தாம் எதிர்பார்த்ததைவிட மிக அருமையாக உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் விமல்.

படம் மிக கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறார். 

அண்மையில் ‘கன்னி ராசி’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் நாயகனாக விமல், அவரது ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பேசிய விமல், இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் என்றார்.

“யோகிபாபு, ரோபோ சங்கர், காளிவெங்கட் என எல்லோருடனும் பல காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களுடன் காணப்படுவார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார்,” என்று விமல் கூறிய போது பலத்த சிரிப்பலை.

தொடர்ந்து நல்ல படங்களாகத் தேர்வு செய்து நடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ரசிகர்களின் ஆதரவு நீடிப்பது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார்.

“பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படத்தில் முதல்முறையாக ஒரு ஆணுடன் நடித்துள்ளேன்,” என்று மறைமுகமாக அவர் வரலட்சுமியைக் கிண்டல் செய்ய, மீண்டும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘துணிந்து செய்’ படத்தில் ரத்தன் மவுலி, நயனா. படம்: ஊடகம்

09 Dec 2019

துணிந்து செய்

“கவர்ச்சி காட்டுவது குற்றச்செயல் அல்ல. ஆனால் அந்தக் கவர்ச்சியை யார் காட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் இந்த விஷயம் மாறுபடும்.  படம்: ஊடகம்

08 Dec 2019

‘கவர்ச்சியாக நடிப்பது குற்றச்செயல் அல்ல’