13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பு

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் விஜயசாந்தி. 

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா மூலம் ‘கல்லுக்குள் ஈரம்’  படத்தில் அறிமுகமானவர் விஜயசாந்தி. அதன் பிறகு தமிழிலும் தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தார். 

அவர் தனி நாயகியாக, குறிப்பாக காவல்துறை அதிகாரியாக நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

அதிலும் வைஜெயந்தி ஐபிஎஸ் படம் வசூலில் முன்னணி நடிகர்களின் படங்களையும் முந்தியது. 

இந்நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டார் விஜயசாந்தி. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறதாம். 

மகேஷ் பாபு படத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. 

மகேஷ் பாபு கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ‘கொடுக்கு டிட்டின்னா கபூரம்’ படத்தில் விஜய சாந்தியின் மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.