சர்ச்சைக்குரிய ‘ராப்’ காணொளி - 24 மாதம் நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை

உள்ளூர் ‘யூடியூப்’ பிரபலம் ப்ரீத்தி நாயரும் அவருடைய சகோதரர் சுபாஸ் நாயரும் இணையத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ‘ராப்’ காணொளியின் தொடர்பில் போலிசார் நேற்று நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தின் சூழ்நிலைகளைப் பரிசீலித்து, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, உடன்பிறப்புகளுக்கு 24 மாதக் கால நிபந்தனையுடன்கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

இத்தகைய நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கையின்படி இருவரும் 24 மாதங்களுக்கு எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால் தாங்கள் ஏற்கெனவே காணொளி வெளியிட்டதன் தொடர்பிலான குற்றத்திற்கும் புதிதாகப் புரிந்துள்ள குற்றத்திற்கும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

சர்ச்சைக்குரிய காணொளி சென்ற மாதம் 29ஆம் தேதி ஃபேஸ்புக்கிலும் யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதே நாளில் காணொளி பற்றி போலிசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.

அந்தக் காணொளியைத் தயாரித்து வெளியிட்டதாக ப்ரீத்தியும் அவரது சகோதரரும் போலிசாரிடம் பின்னர் ஒப்புக்கொண்டனர்.

“இந்தக் காணொளி குற்றவியல் தண்டனை சட்டத்தைத் தெளிவாக மீறியிருந்தது,” என போலிசாரின் அறிக்கை குறிப்பிட்டது.

“இந்தக் காணொளி அனுமதிக்கப்பட்டால், எல்லா சமூகங்களையும் குறிவைக்கும் இதுபோன்ற மற்ற அவதூறான காணொளிகளையும் அனுமதிக்க வேண்டியிருக்கும்,” என அறிக்கை கூறியது.

இதுபோன்ற செயல்களால் இனவாதமும் இனப்பூசலும் மோசமடைந்து முடிவில் வன்செயலும் வெடிக்கக்கூடும் எனவும் அண்மைக் காலமாக உலகெங்கிலும் நடந்துவரும் நிகழ்வுகள் அதைத் தெளிவாகக் காட்டுவதாகவும் போலிசார் கூறினர்.

“இத்தகைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக மலாய் மற்றும் இந்திய சமூகங்கள், அதிகமாகப் பாதிக்கப்படக்கூடும்.

“இனத்தையும் சமயத்தையும் குறிவைக்கும் எந்தவித அவதூறான பேச்சையும் அனுமதிக்காத தெளிவான அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடிக்கிறது,” என போலிசார் குறிப்பிட்டனர்.

இணையம் வழி கட்டணம் செலுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட ‘இ-பே’ விளம்பரத்திற்குப் பதிலடி தரும் விதத்தில் உடன்பிறப்புகள் இக்காணொளியைத் தயாரித்திருந்தனர்.

‘இ-பே’ விளம்பரத்தில் உள்ளூர் நடிகரான டெனிஸ் சியூ நான்கு வேடங்களில் வலம் வந்திருந்தார். அதில் ஒன்று கறுத்த தோல் கொண்ட ஓர் இந்திய ஆடவர்.

இனவாதம் தொடர்பில் அந்த விளம்பரத்திற்காகவும் போலிசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அவ்விளம்பரம் எவ்விதத்திலும் சட்டத்தை மீறவில்லை என்று சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

இதற்கிடையே நேற்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் விளம்பரத்தை மதிப்பிட்டு முடித்த பட்சத்தில் தனி அறிக்கையை வெளியிட்டது. விளம்பரம் எந்த வகையிலும் கோட்பாடுகளை மீறாவிட்டாலும் அது சிறுபான்மையினரைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஆணையம் கூறி, விளம்பரத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கடுமையாக எச்சரித்தது.

இதன் தொடர்பில் நேற்று மாலை ப்ரீத்தி நாயர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

‘இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது’ என்பதைக் குறிக்கும் வகையில் பதிவிட்டிருந்த அவர், கடந்த இரு வாரங்களாகத் தனக்கு உதவ முன்வந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இனிமேல் சாயம் பூசப்பட்ட முகங்களும் சர்ச்சைக்குரிய ‘ராப்’ காணொளிகளும் வெளிவரக்கூடாது என்றும் அனைவரும் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்று நடந்து கொள்ளவேண்டும் என்றும் தான் நம்புவதாக ப்ரீத்தி கூறியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!