புறக்கணிக்கப்பட்ட தமிழ் சினிமா: பாரதிராஜா கோபம்

தமிழ்த் திரையுலகில் தற்போது பல நல்ல தயாரிப்பாளர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

எனினும் நல்ல படங்களை விநியோகிக்க போதுமான விநியோகஸ்தர்கள்  கிடைப்பதுதான் கடினமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

‘ஐங்கரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தேசிய விருதுகளை அளிக்கும் விஷயத்தில் தமிழ்ப் படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.

“தமிழ்ப் படங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது பலருக்கும் புரியவில்லை. முன்பு படங்

களைத் தேர்வு செய்யும் குழுவிற்கு தலைவராக இருந்தபோது கூட, சண்டையிட்டுத்தான் ஏழு தமிழ்ப் படங்களுக்குத் தேசிய விரு க் கொடுத்தேன். 

“இப்போது நாம் இருக்கும் சூழல் சரியில்லை. அதற்கு ஒரு பெரிய திறவுகோல் இருக்கிறது. அதைப் போட்டு திறக்க முயற்சிக்கலாம். முடியவில்லை என்றால் உடைக்கலாம். 

“தமிழ் சேம்பர் என்று ஒன்றிருந்தால்தான், தமிழர் ஒருவர் பொறுப்பில் இருந்து கொண்டு தமிழ்ப் படங்களை தேசிய விருது குழுவுக்கு அனுப்ப முடியும். இதை நான் பல ஆண்டுகளாகச் சொல்லியும் நிலைமை மாறவில்லை.

“யார் யாரோ பொறுப்பில் இருந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய படங்களை மட்டும் தேர்வு குழுவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்,” என்றார் பாரதிராஜா.

தமிழ்த் திரையுலகில் தற்போது தரமான இயக்குநர்கள் வந்திருப்

பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த தலைமுறையில் தரமான தமிழ்ப் படங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

“இம்முறை கேரளாவுக்கு 12 தேசிய விருது, ஆந்திராவுக்கு 11 விருது, கர்நாடகாவுக்கு 9 விருது என அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு கேவலம் ஒரே ஒரு விருது மட்டுமே அளித்துள்ளனர்.

“விருது பெற்ற அந்தப் படத்தின் பெயர் கூட சரியாகத் தெரியவில்லை. எவ்வளவோ தரமான படங்கள் வந்துள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் தேர்வுக் குழு விருதுக்கு பரிசீலிக்கவே இல்லை,” என்றார் பாரதிராஜா.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்