புதுப் படங்களில் நடிக்கும் வடிவேலு

‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் தொடர்பான சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து புது படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் வடிவேலு. 

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். சில நாட்கள் அமைதியாக இருக்கலாம் என்று முடிவு செய்துதான் படங்களில் நடிக்காமல் இருந்தாராம். 

சினிமா தன்னை ஒருபோதும் ஒதுக்கியதில்லை என்றும் இனிமேலும் ஒதுக்காது என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“எனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை செப்டம்பர் இறுதியில் வெளியிடுவேன். அந்த அறிவிப்பே மிகவும் சுவாரசியமாக இருக்கும். 

“அதைக் கேட்டால் மக்கள் ஜாலியாகி விடுவார்கள். அசத்தலான கதைக்களம், மிரட்டுகிற முதல் தோற்ற சுவரொட்டி என தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குமளவுக்கு பிய்த்து உதறப் போகிறோம்,” என்று தெரிவித்துள்ளார் வடிவேலு.