புதுப்படம் இயக்கி நடிக்கும் சிம்பு

புதுப்படம் இயக்கி நடிக்கும் சிம்பு

1 mins read
1f74445b-09ba-4578-8530-a3945c048049
பிரேம்ஜி, வெங்கட் பிரபுவுடன் சிம்பு, படம்: ஊடகம் -

சிம்பு நடிப்பதாக இருந்த 'மாநாடு' படம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த சிம்பு, 'மகா மாநாடு' படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

'மாநாடு' படத்தை வெங்கட்பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சிம்பு தரப்பின் தாமதத்தால் படத்தை உரிய நேரத்தில் துவங்க முடியவில்லை.

இதனால் வேறொரு நடிகரை வைத்து அப்படத்தை தயாரிப்பதாக தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

இந்நிலையில் ரூ.125 கோடி செலவில் மகா மாநாடு என்ற படத்தை தயாரித்து நடிக்கப்போவதாக சிம்பு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.