இரட்டை வேடங்களில் இந்துஜா

இரட்டை வேடங்களில் இந்துஜா

1 mins read
a2d9b7fd-9eb1-4ca7-8a70-1b7152dde898
-

முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் இந்துஜா. படத்துக்கு 'சூப்பர் டூப்பர்' என்று பெயர் வைத்துள்ளனர்.

'ஆண்மை தவறேல்' படத்தில் நடித்த துருவாதான் இதில் கதாநாயகன். கதைப்படி சாதாரண பெண்ணாகவும், அதிரடியாகச் செயல்படும் இளம்பெண்ணாகவும் இரு வேடங்களில் அசத்தி உள்ளாராம் இந்துஜா.

"இயக்குநர் என்னை முதலில் அணுகியபோது இரட்டை வேடத்தில் நடிக்கத் தயங்கினேன். படக்குழுவில் இருந்த பலரும் சினிமாவிற்குப் புதியவர்கள். எனவே இயல்பாகவே தயக்கம் ஏற்பட்டது. ஆனால், முழுக் கதையையும் இயக்குநர் ஒவ்வொரு காட்சியாக விளக்கிக் கூறியதும் எல்லா தயக்கமும் பறந்து போனது. நானும் நடிக்க வந்தபோது புதுமுகம்தானே. அதையும் மனதிற் கொண்டுதான் நடித்தேன்," என்கிறார் இந்துஜா.

'பில்லா பாண்டி', 'பூமராங்' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த இவர், தற்போது விஜய்யின் 'பிகில்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.