'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் ஏராளமான இளையர்களைக் கவர்ந்துள்ளார் இளம் போட்டியாளர் முகேன் ராவ்.
மலேசியாவைச் சேர்ந்த இவர், தனி இசைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். உள்நாட்டில் தயாரான சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கானோர் முகேனை பின்பற்றுகின்றனர். இந்த முறை 'பிக்பாஸ்' வெற்றியாளராக இவர் தான் சாதிப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
முகேன் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் விருப்பமாக இருந்துள்ளது. ஆனால் ஒரு சம்பவத்தில் அவரது ஒரு கையில் கட்டைவிரல் துண்டாகிவிட்டதாம். அதனால் போலிஸ் வேலைக்கு முயற்சி செய்யவில்லை.
மலேசியாவில் இவர் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரொம்ப பிரபலம். 'பிக்பாஸ்' போட்டி முடிந்தவுடன் தமிழ்ப் படங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்பது தான் முகேனின் இலக்காக உள்ளதாம். அவரை ஒப்பந்தம் செய்ய சில தயாரிப்பாளர் கள் தயாராக உள்ளனர்.

